பிரித்தானிய சைவமுன்னேற்றச்சங்கம், இணையவழியே நடாத்தும் பண்ணிசை வகுப்பு மாணவர்களுக்கான பண்ணிசை பரீட்சைகள் நடாத்தப்பட்டு சான்றிதழ் வழங்கும் வைபவம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. நிரஞ்சன் அவர்களின் தலைமையில், கலாநிதி சிவஶ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் திருமுன்னிலை வகிக்க நடைபெற்றது.
விழாவில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ, அருணாசலம் அரவிந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டார்.கல்வியாளர்கள், மாணவர்கள், அவர்தம் பெற்றோர் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்ட நிகழ்வு
இணையவழி பண்ணிசை வகுப்பு ஆசிரியர், தேஜஸ்வராலயா கலைக்கூட இயக்குனர் கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவ அதிதிகளாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு. அனிருத்தனன், உதவிப்பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன், கல்வி அமைச்சு உயரதிகாரிகளான திரு. முரளிதரன், திரு. பிரணவதாசன், திரு. S. K. பிரபாகரன், விடைக்கொடிச் செல்வர் திரு. தனபாலா, பிரித்தானிய சைவமுன்னேற்றச்சங்க மூத்த உறுப்பினர்கான திரு. லோகநாதன், திரு. ரபீந்திரமோகன், திரு. பாலசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழும், காப்பாளர் திரு. லோகநாதன் அவர்களால் ஊக்குவிப்பு தொகையும் வழங்கப்பட்டது.ஆசிரியர், கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி அவர்கள் பாராட்டப்பெற்றார்.இலங்கையில் இருந்து கற்பிக்கும் மற்றொரு ஆசிரியராக விரிவுரையாளர் திருமதி ஹம்சத்வனி விளங்குகிறார். தேஜஸ்வராலயா கலைக்கூட மாணவர்களின் கலை ஆற்றுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.